• Sun. Oct 12th, 2025

ஒத்தி வைக்கப்பட்ட ஆசியக் கிண்ண போட்டி

Byadmin

May 25, 2021

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறுவதாக இருந்த ஆசியக் கிண்ண போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

2020 செப்டம்பரில் டி20 ஆசிய கிண்ண போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. டி20 ஆசிய கிண்ண போட்டியில் இந்தியாவும் பங்கேற்பதால் பாகிஸ்தானுக்குப் பதிலாக வேறு நாட்டில் போட்டி நடைபெறவேண்டிய சூழல் இருந்தது. 2018 இல் ஆசிய கிண்ண இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி நடைபெற்றது.

பிறகு, 2020 டி20 ஆசியக் கிண்ண போட்டி பாகிஸ்தானில் நடைபெறுவதற்குப் பதிலாக இலங்கையில் நடைபெறும் எனக் கூறப்பட்டது. தனக்கு வழங்கப்பட்ட உரிமையை இலங்கைக்கு வழங்கிய பாகிஸ்தான், 2022 இல் இலங்கையில் நடைபெறுவதாக உள்ள ஆசியக் கிண்ண போட்டியைத் தனது நாட்டில் நடத்தவும் திட்டமிட்டிருந்தது.

2010 க்குப் பிறகு இலங்கையில் ஆசியக் கிண்ண போட்டி நடைபெற்றதில்லை. இதனால் பல வருடங்களுக்குப் பிறகு அந்த நாட்டில் ஆசியக் கிண்ண நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020 ஆசியக் கிண்ண போட்டி ஒத்திவைக்கப்பட்டது. ஆசியக் கிண்ண 2021 இல் இலங்கையிலும் 2022 இல் பாகிஸ்தானிலும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜூன் மாதம் போட்டி நடைபெறுவதாக இருந்த 2021 ஆசியக் கிண்ண போட்டியும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் போட்டி ஒத்திவைக்கப்படுவதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இதை அடுத்து இந்தப் போட்டி 2023 இல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆசியக் கிண்ண போட்டி பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *