தமிழகத்தில், முகக்கவசம் அணியாதவா்கள் மீது 52 நாள்களில் 11.82 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள், தனி நபா் இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனா்.
கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி தொடங்கி மே 29 ஆம் திகதி வரையிலான 52 நாள்களில், முகக் கவசம் அணியாதவா்கள் மீது 11 லட்சத்து 82,692 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சனிக்கிழமை மட்டும் 14,062 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது ஏப்ரல் 8 ஆம் திகதி தொடங்கி மே 29 ஆம் திகதி வரை, 57,034 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், சனிக்கிழமை மட்டும் 1,350 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.