• Sat. Oct 11th, 2025

பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது தொடர்பாக இதுவரையில் எவ்வித தீர்மானமும் இல்லை

Byadmin

Jun 1, 2021

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயண கட்டுப்பாடானது, எதிர்வரும் 7 ஆம் திகதியின் பின்னர் நீடிப்பது தொடர்பாக இதுவரையிலும் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வைத்தியர்கள் உள்ளிட்ட பொறுப்பான தரப்பினருடன் நாளாந்த அறிக்கைகளை ஆராய்ந்த பின்னர், ஜனாதிபதி செயலணியுடனும் கலந்துரையாடி இறுதித்தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

மேலும், எதிர்வரும் 7 ஆம் திகதி வரை நிலவும் நிலைமையைக் கருத்திற் கொண்டு, அந்த நிலைமையின் அடிப்படையில் மிகவும் பொருத்தமான தீர்மானம் எடுக்கப்படும்.

அத்துடன், கடந்த ஒரு வாரத்திற்குமேல் பயணக் கட்டுப்பாடுகளை விதித்ததன் வெற்றி அல்லது தோல்வியை ஜூன் 1 ஆம் திகதிக்குப் பின்னர்தான் அறிய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளன.

இதன்படி, முதல் டோஸை எடுத்தவர்கள், தமது அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள குறித்த திகதியில் மற்றும் முதலாவது டோஸ் பெறப்பட்ட இடத்திலேயே இரண்டாவது டோசையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *