நடமாடும் சேவையினூடாக வீடுகளுக்கு மரக்கறிகளை விநியோகிக்கும் வர்த்தகர்கள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபை சோதனைகளை ஆரம்பித்துள்ளது. மரக்கறிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்துள்ள முறைப்பாடுகளுக்கு அமைய, இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்கள் பலருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.