• Sun. Oct 12th, 2025

எனது மகனின், இறுதிநேரம் எப்படி இருந்தது

Byadmin

Jun 16, 2021

எனது மகனின் இறுதி நேரம் எப்படி இருந்தது என்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கேட்குகிறார்கள்.

சுருக்கமாக பகிர்கின்றேன்.மூன்று மாதமாக கடும் வேதனையில் அவதிப்பட்ட சுதைஸ், அடிக்கடி என்னை பக்கத்தில் அழைத்து என்னை முத்திமிடுவார்.

முத்தமிடுவதை பல மக்கள் கண்டும் இருக்கிறார்கள்.அடிக்கடி சுவனத்தைப்பற்றி பேசுவார். ஒருமுறை நான் சொன்னேன்,நான் பாவம் செய்யாத பச்சிளம் பாலகன், உன் பாதையில் குர்ஆனை பாடமிடப்போன போது, உன் பாதையில் வைத்தே இந்த நோயை நீ தந்தாய், நான் மீண்டும் ஓதலை தொடர வேண்டும். நானும்  ஏனைய சிறார்களை போன்று விளையாட வேண்டும், திரிய வேண்டும். ஆகவே எனது நோயை எனது வாப்பாவுக்கு கொடுத்துவிட்டு, என்னை விட்டு விடு யா அல்லாஹ் என்று கேளு மகேன் என்றேன.

அதற்கு அந்த சுவன சிட்டுக்குருவியின் பதில் என்ன தெரியுமா? 

அவனை வளைத்து இருந்தவர்கள் கதரி விட்டார்கள்.அந்த வேதனையில் அவன் சொன்னான் நான் மரணித்தால் நான் மட்டுமே போவேன் வாப்பா, ஆனால் இந்நோயினால் நீங்கள் மரணமடைந்தால் நான்கு பிள்ளைகள், உம்மா எல்லோரும் கஷ்டப்படுவார்கள். நாங்களும் அனாதையாகி, உம்மாவும் விதைவையாகி எங்களை பார்ப்பது யார் என்று கூறினான். 

இவனின் ஈமானின் உறுதிக்கு எல்லையே இல்லை. நான் அவனிடம் அடிக்கடி சொல்வேன் மகனே உன் இன்பத்திற்கும், உன் சுவன நிம்மதியான வாழ்க்கைகும் இந்த மரணம் என்ற ஒன்றேதாண்டா தடை.உன் உயிர் பிரிந்தால் உடனே சுவனம் சென்று நீ மகிழ்வாய் மகனே என்று நான் அவனை அடிக்கடி உற்சாகம் ஊட்டி, தைரிய மூட்டுவேன்.

இதே போலவே சனிக்கிழமை இரவு 8;மணியளவில் பலூடா குடிக்க வேண்டும் வாங்கி வாருங்கள் வாப்பா என்றான். நான் சொன்னேன் லொக்டவ்ன் காலம்,அதுவும் இரவு எங்க மகன் எடுப்பது என்று இல்லை நீங்கள் எடுப்பீர்கள் என்றான். இறை நம்பிக்கையோடு சென்றேன்.எப்படியோ பெற்றுக்கொண்டு கொடுத்தேன் மூன்று மிடல் குடித்தான்.அதன் பின் வழமை  போன்று நித்திரை மாத்திரையை குடித்து விட்டு தூங்கி விட்டார்.

அவர் தூங்கினால், அவர் எழும் வரை என் வீட்டில் யாரையும் சத்தம் போடவிடமாட்டேன். கோழி கூவினால் கூட ஆத்திரமடைவேன்.அதே போல் அவர் எழும் வரை காலை 09 மணி வரை காத்திருந்தேன். அதன் பின்பு எழுந்தார் உம்மாவையும்,வாப்பாவையும் கூப்பிட்டார். முகத்தை துடைக்க ஒரு சீலையை நனைத்து கொண்டுவாங்க என்றார், 

உம்மா கொண்டு போய் கொடுக்க,முகத்தை துடைத்தார்.அதன் பின் உம்மா ஒட்ஸ் கஞ்சி காய்ச்சி கொடுத்தார் 4 கரண்டி குடித்தார்.மீண்டும் உம்மாவை அழைத்து எனக்கு பெரிய மீனின் தலை சாப்பிடனும் என்றார். உம்மா சொன்னா பெரிய மீனின் தலை எங்க மகன் எடுப்பது. ஊரே மூடி என்று உம்மா சொல்லி உள்ளார். கடலுக்குள் சென்றாவது மீன் தலை கொண்டாங்க வாப்பா என்றார்.இத்தனை நாட்களாக சாப்பிடாமல் இருந்த மகன் ஆர்வத்தோடு சாப்பாடு கேட்கிறானே என்ற ஆரவத்துடனும், மீன் தலை கிடைக்குமா என்ற கவலையுடனும் வெளியாகினேன், அல்லாஹ்வின் உதவியோடு பாரை மீன் தலை கிடைத்தது கொண்டு வந்து மகனிடம் சொன்னேன். தலை கிடைத்து விட்டது. அப்போது உம்மாவிடம் சொன்னார் இண்டைக்கு நீங்கள் எல்லோரும் சாப்பிடுவது போல் உறப்பல்லாம் போட்டு சமைங்க, உங்கள் இடத்திற்கு சாப்பாட்டுக்கு வருவேன் என்றான் சுதைஸ். 

அவனின் இறுதி நேரத்தை அறிந்த அவன், நான் சிரித்து விட்டு சொன்னேன் நம்மட ஊட்டான மகன் இருக்கீங்க. தலையை கூட உயர்த்த மாட்டீங்க எப்படி மகன் வரூவீங்க என்று கூறிவிட்டு, நான் மனைவியிடம் சொன்னேன்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *