• Sun. Oct 12th, 2025

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதிக்கு எதிராக மனு தாக்கல்

Byadmin

Jun 18, 2021

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 227 சொகுசு எஸ்யூவிகளை இறக்குமதி செய்வதற்கான முடிவு, அரசியலமைப்பை மீறுவதாக நீதிமன்றம் தீர்ப்பளிக்கக் கோரி, உயர்நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜேவிபியின் மேல் மாகாணசபை முன்னாள் உறுப்பினர் மஹிந்த ஜெயசிங்க இன்று உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோர் அட்டிகல்லே உட்பட்டவர்கள் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நாடு கோவிட் தொற்றினால் பாரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் 1.8மில்லியன் டொலர் செலவில் இந்த வாகன இறக்குமதி மேற்கொள்ளப்படவிருந்தது.

அத்துடன் அமைச்சரவை அனுமதி கிடைக்கும் முன்னரே வாகன இறக்குமதிக்கான வங்கி கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளதாக ஜேவிபி ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தது.

இது “போர்ட் சிட்டி ஆணைக்குழுக்கு ஆதரவாக வாக்களித்த விடயத்துடன் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் ஜேவிபி சந்தேகம் வெளியிட்டிருந்தது.

இதனையடுத்து தமது முடிவை மாற்றிக்கொண்ட இலங்கை அரசாங்கம், குறித்த வாகன இறக்குமதி விடயம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தது. எனினும் ஜேவிபி இன்று இதற்கு எதிராக மனுவை தாக்கல் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *