(இராஜதுரை ஹஷான்)
‘அயலகத்திற்கு முதலிடம் ‘என்ற கொள்கையின் அடிப்படையில் இந்தியா இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குகிறதே தவிர அரசியல் ரீதியிலான எவ்வித கொடுக்கல் வாங்கல்களும் டெல்லியுடன் இல்லை.
எதிர்வரும் நாட்களில் இந்தியாவிடமிருந்து மேலும் ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொருளாதார சிக்கலிருந்து மீளுவும்,பொருளாதார முன்னேற்ற வழிமுறையை அடையாளம் காணவும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபுணத்துவ ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது ,அதற்கிணங்க தொழினுட்ப நிபுணத்துவ குழுவினர் ஓரிரு நாட்களில் இலங்கைக்கு வருகை தருவார்கள் எனவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வரவு செலவு திட்டத்தில் ஒரு இலட்சம் செயற்திட்டத்தின் ஆரம்ப பணிகள் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இச்செயற்திட்டத்தின் ஊடாக ஒரு கிராமசேவகர் பிரிவிற்ககு 30 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்படும்.அரசியல் கட்சி வேறுப்பாடின்றி அனைத்து மாகாணங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு செல்ல தயார்
நாளை தேர்தல் இடம் பெற்றாலும் அதனை முழுமையாக ஏற்றுக் கொள்வேன்.
ஜனாதிபதி தேர்தல்,பாராளுமன்ற தேர்தல் மற்றும் மகாhண சபை தேர்தல் ஆகிய தேர்தல்களை தற்போது நடத்த முடியாது.உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்த முடியும்.
பொது காரணிகளை கருத்திற் கொண்டு உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தல்கள் ஒரு வருட காலத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.
உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது பொதுஜன பெரமுனவின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கொள்கையாகும்.
எதிர்வரும் 9ஆம் திகதி அநுராதபுரத்தில் முதலாவது செயற்பாட்டு ரீதியிலான அரசியல் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இந்தியாவுடனான நல்லுறவு
இந்தியாவுடன் கடன் பெற்றுக் கொள்ளப்படும் போது அரசியல் ரீதியிலான எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை.
2021ஆம் ஆண்;டில் இறுதி காலாண்டின் போது இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தேன்.
அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு உதவி புரியுமாறு இந்தியாவிடம் வலியுறுத்தினேன்.
‘அயலகத்திற்கு முதலிடம்’ என்ற கொள்கையின் அடிப்படையில் இலங்கைக்கு உதவி புரிய இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.
மருந்து,உணவு பொருட்கள் மற்றும் எரிபொருள் ஆகிய அத்தியாவசிய தேவைகளுக்கு இந்தியா நிதியுதவி வழங்கியுள்ளது.
இந்தியாவிடமிருந்துது எதிர்வரும் வாரமும்,மார்ச் மாதத்தின் முதல்வாரத்திலும் மேலும் 1000ஆயிரம் மில்லியன் டொலர் நிதியுதவி கிடைக்கப் பெறும்.
சீனாவுடனான நல்லுறவு
இந்தியா உட்பட வலய நாடுகளுடனான நல்லுறவு சீனாவின் நல்லுறவிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமைய வேண்டும்.
சீனா இலங்கைக்கு பல்துறைகளில் உதவி புரிந்துள்ளது. ஆகவே சீனாவின் நல்லுறவை வலுவாக பேணுவது அத்தியாவசியமானது.
ஜெனிவா விவகாரம்
ஜெனிவா விவகாரம் குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது.
வெளிவிவகாரத்துறை அமைச்சர் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவாரத்த்தை மேற்கொண்டுள்ளதுடன்,ஜனாதிபதியும் அமைச்சரவை மட்டத்தில் உரிய நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்.
2009ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜெனிவா விவகாரத்திற்கு சிறந்த செயலொழுங்கினை முன்னெடுத்தார்.
2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் அனைத்தையும் தலைகீழாக மாற்றியமைத்தது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தவுடன் ஜெனிவா விவகாரத்திற்கு சுமூகமான தீர்வினை காணும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்.
பொருளாதார மீளெழுச்சி
தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் உரிய திட்டங்களை செயற்படுத்தியுள்ளது.
அரசமுறை கடன்களை மீன் செலுத்துவதுடன் பொருளாதாரத்தை நிலைப்படுத்தவது பிரதான இலக்காக உள்ளது.
2022ஆம் ஆண்டுக்கு மாத்திரம் 6.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை திருப்பி செலுத்த வேண்டும்.கடன் செலுத்தல் மூன்று காலாண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
முதற்காலாண்டில் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டும்.
இவ்வருடத்திற்கு மாத்திரம் மருந்து,அத்தியாவசிய உணவு பொருட்கள்,எரிபொருள் ,கைத்தொழில்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள 30ஆயிரம் மில்லியன் டொலர் அவசியமாகும்.
சர்வதேச நாணய நிதியம்
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கும்,பொருளாதார மேம்பாட்டு வழிமுறையை விளங்கிக் கொள்ளவும் சர்வதேச நாணய நிதியத்தின் தொழில்நுட்ப குழுவின் ஆதரவை கோரியுள்ளோம்.
அதற்கமைய நாணய நிதியத்தின் தொழில்நுட்ப குழுவினர் ஓரிரு நாட்களில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்கள்.
ஒரு நாடு பொருளாதார நெருக்கடி நிலைமையில் உள்ள போது ஆலோசனை வழங்கும் பொறுப்பு சர்வதேச நாணய நிதியத்திற்கு உண்டு.
சேதன பசளை திட்டம்
தற்போது சேதன பசளை திட்டத்திற்கு எதிராகவும் எதிர்ப்புக்கள் தோற்றம் பெற்றுள்ளன.
சேதன பசளை திட்டத்தை செயற்படுத்திய விதத்தில் ஒரு சில குறைப்பாடுகள் காணப்படுகின்றன என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.
விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அண்மையில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தில் நெற்பயிர்ச்செய்கையாளர்களுக்கு மாத்திரம் நட்டஈடு என்று குறிப்பிடப்படவில்லை.
சகல விவசாயிகளுக்கும் நட்டஈடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.