பெலருஸில் உயர்கல்வியில் ஈடுபடும் இலங்கை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நிலவும் மோதல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.
பெலருஸில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் சுமார் 1500 இலங்கை மாணவர்களின் பெற்றோர்கள் விடுத்த கோரிக்கைக்கு உடனடியாக பதிலளிக்கும் வகையில் இந்த உத்தரவு பிரதமரினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் ரஷ்யா அல்லது இலங்கை செல்வதற்கு விசா வழங்குமாறும் பிரதமர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார், அதே நேரத்தில் கல்வி நடவடிக்கைகளை பல வாரங்களுக்கு ஒத்திவைப்பது குறித்து பல்கலைக்கழக அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.