சுகாதார அமைச்சினால் 500 மில்லிகிராம் பரசிட்டமோல் வில்லையொன்றின் அதிகபட்ச சில்லறை விலையை 2 ரூபா 30 சதமாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 28 முதல் அமுலுக்கு வரும் வகையில் சுகாதார அமைச்சினால் குறித்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டத்தின் 142 ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய 500 மில்லி கிராம் பரசிட்டமோல் வர்க்கத்தை சேர்ந்த மாத்திரைகளின் அதிகபட்ச சில்லறை விலை 2 ரூபாய் 50 சதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பரசிட்டமோல் மாத்திரைகளை எவரும் நிர்ணய விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முடியாது என்றும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு அவற்றை விநியோகிப்பவர்கள் அதற்கான உரிய பற்றுச்சீட்டினை வழங்க வேண்டும் என்றும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் பரசிட்டமோல் வர்க்க உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் அது சார்ந்த மாத்திரைகளின் விலைகளை 35 சதவீதத்தினால் அதிகரிக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.