225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் நாட்டு மக்கள் வெறுக்கும் நிலைமை தற்போது தோற்றம் பெற்றுள்ளது.
நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளக்கு தீர்வு காண அரசாங்கத்திற்குள் மாறுப்பட்ட யோசனைகள் காணப்படுகின்றன .
ஒன்றினைந்து செயற்பட்டால் மாத்திரமே சவால்களை வெற்றிக்கொள்ள முடியும் என ஸ்ரீ லங்கா பொதுஜனபெரவின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பெரமுனவின் காரியாலயத்தில புதன்கிழமை (2) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
டொலர் நெருக்கடி தீவிரமடைந்துள்ள காரணத்தினால் எரிபொருள் பற்றாக்குறை தோற்றம் பெற்றுள்ளதால் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
மின்விநியோக தடையினாலும்,எரிபொருள் பற்றாக்குறை காரணமாகவும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள்.
நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கத்திற்குள் பல யோசனைகள் காணப்படுகின்றன.
பிரச்சினைக்கு தீர்வு காண மாறுப்பட்ட வகையில் யோசனைகளை முன்வைத்தால் எதனையும் முறையாக செயற்படுத்த முடியாமல் போகும்.
ஆகவே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து செயற்பட்டால் மாத்திரம் சவால்களை வெற்றிக்கொள்ள முடியும்.
225 பாராளுமன்ற உறுப்பினர்களும் வேண்டாம் என பொது மக்கள் வெறுக்கும் நிலைமை தற்போது தோற்றம் பெற்றுள்ளது.
ரஷ்யா உக்ரைனுக்கு குண்டு போடுவதை விட பாராளுமன்றிற்கு போட வேண்டும் என மக்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரிமாற்றிக்கொள்ளப்படுவதை அவதானிக்க முடிகிறது.
ஜனநாயக ஆட்சிக்கு அப்பாற்பட்ட ஆட்சிமுறையை தோற்றம் பெறலாம் என மக்கள் கருதுகிறார்கள்.
இவ்வாறான நிலைப்பாடுகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றார்.