எரிபொருள் இருப்புகளைப் பொறுத்து இன்று திட்டமிடப்பட்ட மின்தடை அமுலாகாது அல்லது குறைக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர், ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்தார்.
இன்று முதல் மின் துண்டிப்பை குறைப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வார இறுதியில் நாடு முழுவதும் இரண்டு சுழற்சி முறையில் 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று தெரிவித்துள்ளது.
கொழும்பு நகரில் உடன் அமுலுக்கு வரும் வகையில் நேற்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பு உட்பட இன்று மற்றும் நாளைய மின்வெட்டு அட்டவணைகள் ஏற்கனவே நேற்று வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.