• Fri. Oct 17th, 2025

12 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு கொவிட் தொற்று

Byadmin

Mar 8, 2022

நாட்டில் இதுவரையில் 12 000 இற்கும் அதிக கர்ப்பிணிகள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர், இவர்களில் 61 கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளனர். 

தொற்றுக்கு உள்ளானவர்களில் 5000 இற்கும் அதிகமானோர் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்கள் என்று சுகாதார அமைச்சின் குடும்ப நல சுகாதார பிரிவின் விசேட வைத்திய நிபுணர் கௌசல்யா கசுருசூரியாராச்சி தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று திங்கட்கிழமை 07 அம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் 12 431 கர்ப்பிணிகள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 

2020 இல் 161 கர்பிணிகளும் , 2021 இல் 11 278 கர்பிணிகளும் மற்றும் இவ்வாண்டு இதுவரையில் 1003 கர்பிணிகளும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

2021 இல் கொவிட் தொற்றுடன் இனங்காணப்பட்ட மொத்த  கர்ப்பிணிகளில் 50 சதவீதமானோர் அவ்வாண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களிலேயே தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர். 

கடந்த ஆண்டு 60 கர்பிணிகளும் , இவ்வாண்டில் ஒரு கர்பிணியுடன் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே அதிகளவான கர்ப்பிணிகள் தொற்றுக்கு உள்ளாகினர், மேல் மாகாணத்தில் கம்பஹாவில் அதிகளவிலும் அதற்கு அடுத்தபடியாக கொழும்பு மற்றும் களுத்துறையிலும் கர்பிணிகள் தொற்றுக்கு உள்ளாகும் வீதம் அதிகரித்து காணப்பட்டது. 

இவ்வாறு தொற்றுக்கு உள்ளானவர்களில் 79 சதவீதமானோர் தொழிலுக்கு செல்லாதவர்களாவர்.

அத்தோடு 70 சதவீதமானோருக்கு எவ்வித தொற்று அறிகுறிகளும் காண்பிக்கவில்லை. 

தொற்றுக்கு உள்ளானோர் 75 சதவீதமானோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதோடு , 25 சதவீதமானோருக்கு வீடுகளிலேயே சிகிச்சையளிக்கப்பட்டது. 

134 பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

கர்ப காலத்தில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் நீரழிவு உள்ளிட்ட நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் , உயர் இரத்த அழுத்தமுடையவர்களும் , அதிக உடற்பருமனுடையவர்களும் நோய் தீவிரமடைந்தது. தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணிகளில் 55 சதவீதமானோருக்கு சத்திர சிகிச்சை மூலமாகவே பிரசவம் இடம்பெற்றது.

தொற்றுக்குள்ளானவர்களுக்கு பிறந்த குழந்தைகளில் 19 சதவீதமான குழந்தைகள் நிறை குறைவாகக் காணப்பட்டன. 8 சதவீதமான குழந்தைகளை அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க வேண்டியேற்பட்டது. 

2021 இல் தொற்றுக்கு உள்ளானவர்களில் 5945 பேர் எவ்வித தடுப்பூசியையும் பெறாதவர்களாவர். 

இவ்வாண்டு தொற்றுறுதி செய்யப்பட்டவர்களில் 69 பேர் இவ்வாறு எவ்வித தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளாதவர்களாகவே உள்ளனர். 

இவ்வாறான நிலைமைகளால் கடந்த ஆண்டு கர்ப்பிணிகள் உயிரிழப்பு ஒரு சதவீதத்தினால் அதிகரித்துள்ளது என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *