• Sun. Oct 12th, 2025

இலங்கையில் உலக சாதனை நிகழ்த்திய ஒன்றரை வயது குழந்தை தமது பிள்ளையின் திறமையை எந்த தலைவர்களும் பாராட்டவில்லையென பெற்றோர் கவலை

Byadmin

Mar 16, 2022

அனுராதபுரம் – அழகப்பெருமாகம பகுதியில் ஒன்றரை வயதான பெண் குழந்தை ஒன்று உலக சாதனை படைத்துள்ளது.

2020 ஆம் ஆ ண்டு மே 8 ஆம் திகதி  பிறந்த ஐரின் என்ற குழந்தை 7 நிமிடங்கள் மற்றும் 6 வினாடிகளில் அதிக எண்ணிக்கையிலான பறவைகளை அடையாளம் கண்டு உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

ஆசிய சாதனை புத்தகத் திலும் இந்த குழந்தையின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குழந்தை பூக்கள், விலங்குகள், வாகனங்களை வடிவமைப்பது போன்ற 500க்கும் மேற்பட்ட படங்களை குறுகிய நேரத்துக்குள் அடையாளம் காண்பதுடன், 25க்கும் மேற்பட்ட இலங்கைத் தலைவர்களை அடையாளம் கண்டும் உலக சாதனை படைத்துள்ளது.

குழந்தைக்கு ஒரு வயதாகும் போது பெற்றோர் விலங்குகள் மற்றும் பறவைகளின் புகைப்படங்களை குழந்தைக்கு காண்பித்து அவற்றை அடையாளம் காணும் வகையில் பயிற்சிகளை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இதுவரை எனது குழந்தையின் திறமையை எந்த தலைவர்களும் பாராட்ட வரவில்லையெனவும், அங்கீகாரமும் வழங்கவில்லை எனவும் குழந்தையின் பெற்றோர் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *