மாகொல பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கடவத்தையில் எரிபொருள் வரிசையில் நின்று கொண்டிருந்த போது மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இன்றையதினம் (20) இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தை தொடர்ந்து, குறித்த நபர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த வகையில், எரிபொருள் வரிசையில் நின்றுகொண்டிருந்த போது இடம்பெறும் 2வது மரணம் இதுவாகும்.