• Sun. Oct 12th, 2025

20 ரூபாய் மதிப்புள்ள 2 புதிய நினைவு நாணயங்கள் வெளியீடு

Byadmin

Mar 21, 2022

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தினதும் இந்நாட்டின் முதலாவது சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பினதும் 150ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 20 ரூபாய் பெறுமதியுள்ள இரண்டு புதிய நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டன.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் திருமதி சந்திரிகா எல். விஜேரத்ன மற்றும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.எம்.பி.அனுர குமார ஆகியோர் இன்று, (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு நினைவு நாணயங்களை வழங்கி வைத்தனர்.

மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், பிரதி ஆளுநர் என்.டி.ஜி.ஆர் தம்மிக நாணாயக்கார, நிதி அதிகாரி கே.எம் அபேகோன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

21.03.2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *