நேற்றிரவு பொதுமக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்மிரிஹான இல்லத்திற்குச் பிரதமர் மகிந்த ராஜபக்ச சென்றார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் ஜனாதிபதியின் இல்லத்திற்கு விஜயம் செய்தார்.
வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்ட அதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் படையினர், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.
மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் மீது தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் சமூக ஊடக குழுக்களால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போராட்டத்தில் 3000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர், பின்னர் போலீசார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கி தாக்குதல்களை மேற்கொண்டதுடன் ஊரடங்கும் அமுல்படுத்தியபின்னர் கலைந்து சென்றனர்.