• Sun. Oct 12th, 2025

கர்ப்பிணி பெண்கள் முட்டை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

Byadmin

Apr 24, 2022

கர்ப்ப காலத்தில் முட்டை, நிலக்கடலை, மீன் போன்றவற்றை சாப்பிடுவதால், பிறக்க போகும் உங்களது குழந்தைக்கு எந்த விதமான உணவு அலர்ஜியும் ஏற்படாமல் இருக்கும்.

சைவம் சாப்பிடுபவர்களே அதிகம் விரும்பிச் சாப்பிடும் முட்டை நம் அன்றாட உணவில் முக்கிய பங்கை வகிக்கிறது. முட்டையில் கொழுப்பு, புரதம், வைட்டமின்கள், இரும்புச் சத்து உள்ளது. தினமும் ஒரு முட்டையை சாப்பிடுவது நம் உணவை முழுமையான உணவாக மாற்றுகிறது. குழந்தைகளிடமும், பெரியவர்களிடமும் ஏன் எல்லோரிடமும் கூட ஊட்டச்சத்துக் குறைவால் சில உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. முட்டையில் எவ்வளவு தான் கொலஸ்ட்ரால் இருந்தாலும், அவை இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்காது. பொதுவாக கொலஸ்ட்ரால் உள்ள பொருட்களை டயட்டில் சேர்த்து, இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று சொல்வது தவறு.

முட்டை சாப்பிடுவது, சிசுவின் ஆரோக்கியத்துக்கு நல்லது. எதிர்காலத்தில் பல நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது என்று லேட்டஸ்ட் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

ஆய்வில் கர்ப்ப காலத்தில் இயல்பாகவே தாய்மார்கள் அதிக டென்ஷனுடன் இருப்பார்கள். ஒருவித மன அழுத்தம், இறுக்கம், குழந்தை நல்லபடியாக பிறக்குமா என்ற பயத்துடன் காணப்படுவார்கள். அதிகப்படியான பயம், மன அழுத்தம் ஆகியவை தாய்க்கு மட்டுமின்றி, வயிற்றில் இருக்கும் சிசுவையும் பாதிக்கும். மேலும், கர்ப்ப காலத்தின்போது, கார்டிசால் சுரப்பு குறைந்தால் தொப்புள்கொடி பாதிக்கப்படும். அதனால் சிசுவுக்கு முறையாக சத்துகள் கிடைக்காது. முட்டை அதிகம் சாப்பிடுவதால், கார்டிசால் சுரப்பு சீராகிறது. இதனால், பல பாதிப்புகள் தவிர்க்கப்படுகிறது. கருவில் உள்ள சிசுவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு முட்டையில் உள்ள கோலைன் முக்கிய பங்காற்றுகிறது. சிசுவின் நியூரோ எண்டோகிரைன் சுரப்பு சீராகிறது. ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.

இதனால் வாழ்நாள் முழுவதும் மூளையின் நினைவாற்றல் மற்றும் கற்கும் திறன் சிறப்பாக இருக்கும். முட்டையின் மஞ்சள் கருவில் 125 மி.கி. அளவுக்கு கோலைன் பொருள் உள்ளது. இதுதவிர புரதம், இரும்புசத்து, ஃபோலேட் உள்ளிட்ட பல சத்துகள் முட்டையில் உள்ளதால், கர்ப்பிணிகள் நிறைய சாப்பிடலாம்.

சாதாரணமாக நம் உடலில் உள்ள கல்லீரலானது அன்றாடம் கொலஸ்ட்ராலை அதிக அளவில் உற்பத்தி செய்யும். எப்போது கொலஸ்ட்ரால் நிறைந்த முட்டையை அதிகம் எடுத்து வருகிறோமோ, அப்போது கல்லீரலானது கொலஸ்ட்ரால் உற்பத்தியை குறைத்துவிடும். இதனால் இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்காமல் இருக்கும். பெண்கள் கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு முட்டையை நன்கு வேக வைத்து சாப்பிட்டால், வயிற்றில் வளரும் குழந்தைக்கு வேண்டிய சத்தானது கிடைத்து, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *