21 ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்துவதற்கான பரிந்துரைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 20 மற்றும் 19 ஆவது திருத்தங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய திருத்தங்களுடன் 21 ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அத்துடன், தற்போதைய கோரிக்கைகளுக்கு அமைய புதிய திருத்தங்கள் உள்ளடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பில் உப குழுவொன்றை அமைக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.