அக்கரைப்பற்றுக் கடலில் நீராடியபோது, அலையால் அள்ளுண்டு காணாமல் போன சகோதரர்கள் இருவரும் சடலங்களாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.
நாவற்காட்டைச் சேர்ந்த குமார் சகீத் (வயது 18), குமார் தீவு (வயது 20) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
நண்பர்கள் மூவர் ஞாயிற்றுக்கிழமை (9) கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது, 16 வயதுடைய சிறுவன் ஒருவன் அலையில் அள்ளுண்டுள்ளான்.
இச்சிறுவனைக் காப்பாற்றுவதற்காக முற்பட்ட இச்சகோதரர்கள் இருவரும் அலையால் அள்ளுண்டு காணாமல் போயினர். இவர்களைத் தேடி வந்த நிலையில், இவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் கூறினர்.