பாவனையாளர்களின் முறைப்பாடுகளுக்கு அமைய பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள எரிபொருளின் மாதிரிகள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் ஏற்றுக்கொள்ள கூடிய சுயாதீன குழுவினரால் பரிசோதிக்கப்படவுள்ளன.
எரிபொருளின் தரம் தொடர்பில் ஏதேனும் சிக்கல் காணப்படுமாயின் பாவனையாளர்கள் 011.234234, 011.5455130 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைத்து குறிப்பிட முடியும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.