எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள், உரிமையாளர்கள் மீது சில பாவனையாளர்கள் அச்சுறுத்தல் விடுத்து எரிபொருளை பெற்றுக் கொள்ளுதல் போன்ற விடயங்கள் காரணமாக நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.நிரப்பு நிலையங்களில் order செய்யப்பட்ட அனைத்து எரிபொருள் கையிருப்புகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும், மேல் மாகாணத்தில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் நாவுதுன்ன மேலும் தெரிவித்தார்.