சுமார் இரண்டு வருடங்களின் பின்னர் ஜப்பான் அரசு
வெளிநாட்டு பயண கட்டுப்பாடுகளை, மெதுவாக தளர்த்த தொடங்கியிருக்கின்றது.
கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து முற்றும் மூடப்பட்ட, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாத்துறை, எதிர்வரும் ஜுன் 1ம் திகதி முதல் திறக்கப் படவுள்ளதாகவும், முதலில் மட்டுப்படுத்தப்பட்ட முறையில் இருபதினாயிரம் பேர் அனுமதிக்கப்படுவார்கள் எனவும், தொடர்ச்சியாக நாடு முழுவதும் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் சுமார் நூறு நாடுகள் விசேட கண்காணிப்பு பட்டியலில் உள்ளடங்குவதாகவும், அவைகளுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு நிறங்களின் அடிப்படையிலேயே, நாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் வகை பிரிக்கப்படுவர், என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 90 வீதமான பொருளாதார வீழ்ச்சி, சுற்றுலாத் துறையிற்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.