ஒவ்வொரு பறவையிலும் அல்லாஹ் ஒவ்வொரு அத்தாட்சியை வைத்துள்ளான். சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு அதில் ஒரு படிப்பினை உள்ளது. உதாரணமாக தூக்கனாங் குருவி என்பது ஒரு பறவை என்று மட்டும் தான் நமக்கு தெரியும்.
ஆனால், அந்த பறவை கூட மஹர் என்ற திருமணக்கொடை கொடுத்து தான் தனது வாழ்க்கையை தொடங்கும் என்பது யாருக்காவது தெரியுமா?
தூக்கனாங் குருவியின் இனத்தைப் பொறுத்தவரையில் ஆண் தூக்கனாங் குருவி தான் எப்போதுமே தனது வீடான கூட்டைக் கட்டும் அதில் நாம் வசிப்பது போன்றே பல அறைகள் இருக்குமாம்.
பெண் தூக்கனாங் குருவியானது ஒவ்வொரு கூட்டிலும் நுழைந்து எந்த ஆண் தூக்கனாங் குருவி கட்டிய வீடு தனக்கு பிடித்திருக்கிறதோ அந்த ஆண் தூக்கனாங் குருவியை தன் துணையாக்கி அதனோடு தன் வாழ்க்கையை ஆரம்பித்து இனப் பெருக்கம் செய்யுமாம்.
எவ்வளவு பெரிய அற்புதம் பாருங்கள். ஆனால் மனித சமுதாயம் வரதட்சனை என்ற பெயரில் பெண்ணுடைய வாழ்க்கையையே சுரண்டிக் கொண்டிருக்கிறது. சதாரண பறவையிலிருந்து எவ்வளவு பெரிய ஒரு படிப்பினையை அல்லாஹ் காட்டியுள்ளான்.
பறவைகளை பற்றி அல்லாஹூ தஆலா குர்ஆனில் கூறுகிறான்…
பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை. இவற்றில் எதையும் நம் பதிவுப் புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை. இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்று சேர்க்கப்படும்.
(அல்குர்ஆன்-6:38)
இறக்கைகளை விரித்துக் கொண்டும், சேர்த்துக் கொண்டும், இவர்களுக்கு மேல் (வானில் பறக்கும்) பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அர்ரஹ்மானைத் தவிர (வேறு யாரும் கீழே விழாது) அவற்றைத் தடுத்துக் கொண்டிருக்கவில்லை – நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் நோட்டமிடுபவன்.
(அல்குர்ஆன்-67:19)
படியுங்கள் பணியுங்கள் பரப்புங்கள்
குர்ஆனை.