*1. உங்களில் மிகச்சிறந்தவர், குர்ஆனைக் கற்று, அதனை பிறருக்கும் கற்றுக்கொடுப்பவர் ஆவார்*
புஹாரி 5027
*2 . உங்களில் மிகச்சிறந்தவர், நற்குணத்தால் அழகானவரே*
புஹாரி 6035
*3.உங்களில் மிகச்சிறந்தவர்,(கடனை திருப்பி கொடுக்கும் போது )அழகாக திருப்பி கொடுப்பவரே*
புஹாரி 2305
*4. உங்களில் மிகச்சிறந்தவர், அவரின் நலவு ஆதரவுவைக்கப்பட்டு, கெடுதி அபயமளிக்கப்படுபவரே*
திர்மிதி 2263
*5. உங்களில் மிகச்சிறந்தவர், தனது மனைவியிடத்தில் சிறந்தவரே*
இப்னு ஹிப்பான்
4177
*6. உங்களில் மிகச் சிறந்தவர், விருந்துபசரிப்பவரும், ஸலாத்திற்கு பதிலளிப்பவருமே*
ஸஹீஹுல் ஜாமிஃ
3318
*7. உங்களில் மிகச்சிறந்தவர், தொழுகையில் (பிற சகோதரருக்காக )தோல் புஜத்தை மிருதுவாக வைத்திருப்பவரே*
அத் தர்கீப் வதர்ஹீப்
234/1
*8. மனிதர்களில் மிகச்சிறந்தவர், எவரின் வாழ்நாள் நீளமாகி, செயல்கள் நல்லதாக ஆகிவிடுகிறவரே*
ஸஹீஹுல் ஜாமிஃ 3297
*9. மனிதர்களில் மிகச்சிறந்தவர், மனிதர்களுக்கு பிரயயோஜனமாக இருப்பவரே*
ஸஹீஹுல் ஜாமிஃ
3289
*10. அல்லாஹ் இடத்தில் தோழர்களில் மிகச்சிறந்தவர், தனது தோழர்களுடன் நல்ல முறையில் நடப்பவரே*
மேலும்
*அல்லாஹ்விடத்தில் பக்கத்து வீட்டாரில் மிகச்சிறந்தவர், தனது பக்கத்து வீட்டாருக்கு சிறந்தவராக இருப்பவரே*
அல் அதபுல் முப்ரத்
84
*12. மனிதர்களில் மிகச்சிறந்தவர், பரிசுத்த உள்ளமும், உண்மையான நாவும் கொண்டவரே*
ஸஹீஹுல் ஜாமிஃ
3291
♦♦♦♦♦♦♦♦♦
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்ட சிறந்த மனிதர்களில் , அல்லாஹ் என்னையும் உங்களையும்
சேர்த்தருள்வானாக!
✍✍✍✍✍✍✍✍✍
TRANSLATED BY
M.N.M.ANFAS DHEENI