அப்துல்லாஹ் இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹுமா, அறிவிக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்,
*தொழுகைகளில் அல்லாஹ்விடம் மிகச் சிறந்த தொழுகை, ஜமாஅத்துடன் தொழப்படும் வெள்ளிக்கிழமையின் சுப்ஹுத் தொழுகையாகும்*
நூல் = ஸஹீஹுல் ஜாமிஃ 1119
அபூ ஸஈத் கய்ஸ் இப்னு அப்பாத் றழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், *ஜும்ஆ உடைய இரவு யார் ஸூறதுல் கஃப் ஓதுகிறாரோ, அவருக்கும் பய்துல் அதீகிற்கும் இடையில் பிரகாசம் வழங்கப்படும்*
நூல் – ஸஹீஹுல் ஜாமிஃ 736
TRANSLATED BY
M.N.M.ANFAS DHEENI