தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டுள்ள மர அணிலை பட்டியலில் இருந்து நீக்குவதற்கு
விவசாய மற்றும் வனஜீவராசிகள் அமைச்சுக்கு யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பயிர்களை சேதப்படுத்தும் விலங்கினங்களில் அணில் முதன்மையான இடத்தில் இருப்பதால், அதனை தேசிய விலங்காக நியமித்தமை தடையாக உள்ளதென பல விவசாய அமைப்புகள் முன்மொழிவை சமர்ப்பித்துள்ளன.
அதன் பிரகாரம் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அழிந்துவரும் அச்சுறுத்தலுக்கு உள்ளான பொருத்தமான மற்றுமொரு விலங்கை தேசிய விலங்காகப் பரிந்துரைக்குமாறு கேட்டுள்ளதாக விவசாய அமைச்சர்
மகிந்த அமரவீர தெரிவித்தார்.
தேசிய மரபுரிமை பெயர் சூட்டும் குழு உள்ளிட்ட தரப்பினருடன் இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, தேசிய விலங்காக ஏற்கனவே பல பொருத்தமான விலங்குகளின் பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் இலங்கையின் தேசிய விலங்கான புலியும் அடங்குவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
மர அணிலின் பாதிப்பால் தென்னை, கொக்கோ தோட்டங்களில் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.