அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் நாளை (22) எதிர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ ருவிட்டர் பதிவிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் முன்வைக்கப்படும் சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தி வருவதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் நாளை ஆர்ப்பாட்டம்: கஞ்சன விஜேசேகர
