• Mon. Oct 13th, 2025

கோட்டாபய எடுத்த தனிப்பட்ட முடிவுகள், நாட்டுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது – பீரிஸ்

Byadmin

Aug 22, 2022

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட முடிவுகளை எடுத்ததாலேயே நாட்டில் பெரும் நெருக்கடி ஏற்பட்டதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட முடிவுகளை எடுத்தார். குழுவாக முடிவு எடுக்கப்படவில்லை. அதில் உர விவகாரம் ஒன்று, விடயம் தெரிந்தவர்களிடம் ஆலோசனை கேட்கவில்லை. இவ்வாறான அவரின் முடிவுகள் நாட்டுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்லாதது இதேபோன்ற பிரச்சினையாகும். இத்தகைய எடுத்துக்காட்டுகள் முடிவற்றவை மற்றும் எண்ணற்றவை. ஆனால் நாட்டுக்கு புதிய அரசியல் கலாசாரம் தேவைப்பட்டது.

அதைத்தான் டலஸ் தலைமையில் செய்ய முயற்சித்தோம். கடந்த சில வருடங்களில் அமைச்சரவை முறைமையும் விலக்கப்பட்டிருந்தது.

ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க கட்சி விவாதம் மூலம் தீர்மானம் எடுக்கவில்லை. பொதுச் செயலாளரால் பதில் சொல்ல முடியவில்லை. கட்சியில் உள்ள ஒருவரின் தனிப்பட்ட கருத்தின்படி அந்த முடிவு எடுக்கப்பட்டது. ஒரு கட்சி அப்படி நடந்து கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *