• Mon. Oct 13th, 2025

மிதக்கும் சந்தையை அண்மித்த இடம் போராட்டத்திற்காக வழங்கப்படும், பல்வேறு வசதிகள் இருக்கும்

Byadmin

Sep 14, 2022

இளைஞர்களுக்கு தமது போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக புதிய இடமொன்று விரைவில் வழங்கப்படும் என ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க நேற்று தெரிவித்த்துள்ளார்.

புறக்கோட்டையில் உள்ள மிதக்கும் சந்தையை அண்மித்த இடம் விரைவில் போராட்டத்திற்கு வழங்கப்படும் இந்த இடத்தில் கலைக் கண்காட்சிகள், இலக்கிய விழாக்கள், தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு வசதிகள் இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

போராட்டங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் திறமை மற்றும் ஆற்றல் மிக்கவர்கள். அவர்களின் திறன்களை மேலும் மேம்படுத்த இந்த புதிய மையம் உதவும். எனவே இந்த நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் விரைவில் கையளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவைச் சந்தித்த போராட்ட இளைஞர்கள் சிலர், தமது போராட்டங்களுக்கு மிதக்கும் சந்தைக்கு அருகில் இடம் ஒதுக்கும் நடவடிக்கையை வரவேற்றதாக அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *