• Sun. Oct 12th, 2025

இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான எரிபொருள் Pass திட்டம் இன்று ஆரம்பம்.

Byadmin

Oct 6, 2022

இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான எரிபொருள் Pass திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிரபல தொலைத்தொடர்பு நிறுவனம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகரவின் ஒத்துழைப்புடன் சுற்றுலா பயணிகளுக்கான ‘Tap & Go’ Fuel Pass அறிமுகப்படுத்தப்படுகிறது என்றார்.

சுற்றுலாத்துறையில் உள்ளவர்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு எரிபொருள் அனுமதிச் சீட்டு வழங்கும் திட்டமும் வழங்கப்படும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

“சுற்றுலா பயணிகளின் எரிபொருள் பாஸ் இன்று மாலை QR குறியீடு முறைக்கு வெளியே அறிமுகப்படுத்தப்பட்டது.

சுற்றுலாப் பயணிகள், நாடளாவிய ரீதியில் உள்ள 300 Ceypetco மற்றும் LIOC எரிபொருள் நிலையங்களில் தமது எரிபொருள் தேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்” என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இந்த சுற்றுலா எரிபொருள் அனுமதி அட்டை மூலம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டு முறையைத் தவிர்த்து, அவர்களின் தேவைக்கேற்ப எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

சுற்றுலா எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை எந்தவொரு வெளிநாட்டு நாணயத்திலும் கொள்வனவு செய்வதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளதுடன் இந்த வசதியை நாடளாவிய ரீதியில் உள்ள 300 Ceypetco மற்றும் LIOC பெற்றோல் நிலையங்களில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்

சுற்றுலாத் துறையில் உள்ளவர்களுக்கு இதுபோன்ற சிறப்பு எரிபொருள் அனுமதிச் சீட்டு வழங்குவது குறித்து சோதனை நடத்தப்பட்டு, அது இன்று தொடங்கப்படும் என்றார்.

எரிபொருள் அனுமதிச் சீட்டுக்கு உரித்துடையவர்கள் கட்டாயம் சுற்றுலா சபையில் பதிவு செய்திருக்க வேண்டும் என ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் மேலும் கூறுகையில், அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கும் இலங்கை தொடர்பான சாதகமான தகவல்களை பரப்புவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டிசம்பரில் இலங்கையில் அதிக சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *