வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள எரிபொருள் மீள் நிரப்பு நிலையத்தில் திடீரென மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பற்றி எறிந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த எரிபொருள் மீள் நிரப்பு நிலையத்தில் குறித்த மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த வேளையில் திடீரென மோட்டார் சைக்கிளின் எரிபொருள் தாங்கியிலிருந்து தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இதனை அவதானித்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் உடனடியாக செயற்பட்டு தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமையுடன் பாரிய அனர்த்தத்தினை தவிர்த்துள்ளனர்.
வாகனத்தின் மின் ஒழுக்கு அல்லது வாகனம் இயங்கு நிலையில் வைத்திருந்தமையினால் குறித்த அனர்த்தம் இடம்பெற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.