• Sun. Oct 12th, 2025

மீன்களை பிடித்துக்கொண்டு வந்தவரை, தாக்கிக் கொன்றது யானை

Byadmin

Oct 18, 2022

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தங்கநகர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் சேருநுவர – தங்கநகர் பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான குணசேகரம் இராசநாயகம் ( வயது 48) என்பவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் குளமொன்றுக்குச் சென்று மீன் பிடித்துவிட்டு வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருக்கும்போது இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *