• Sat. Oct 11th, 2025

டேவிட் கெமரூன் இலங்கை வருகை, ரணிலுடன் சந்திப்பு, புதுவருட வாழ்த்துக்களும் பறிமாற்றம்

Byadmin

Jan 2, 2023

தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்துள்ள பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரன் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.

ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்ட கெமரன், ஜனாதிபதிக்கு புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
02-01-2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *