• Sat. Oct 11th, 2025

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நிறைவு

Byadmin

Jan 23, 2023


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி கடந்த ஜனவரி 05 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையில், தேர்தல் நடத்தப்படும் விதம் குறித்து அறிவிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் நாளை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வாரத்தில் இருந்து வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் சுயேட்சைக் குழுக்களின் தலைவர்கள் இன்று மாவட்ட செயலகத்திற்கு அழைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *