• Sun. Oct 12th, 2025

மலச்சிக்கலை குணமாக்கும் வாழைப்பழம் எது?

Byadmin

Aug 16, 2025

வாழைப்பழத்தில் 3000 வகைகள் உண்டு. அதில் உள்ள ஒவ்வொரு வாழைப்பழமும் ஒவ்வொரு விதமான நோய்களை குணமாக்க உதவுகிறது.

பூவன் பழம்

இந்த வாழைப்பழம் அளவில் சிறியது, ஆனால் ஒரு வாழைத்தாரில் 100 முதல் 150 பழங்கள் வரை இருக்கும். இப்பழம் மூலநோயை குணமாக்க உதவுகிறது.

ரஸ்தாளி

இந்த வாழைப்பழத்தில் மருத்துவ குணங்கள் குறைவாக இருந்தாலும் ருசியில் உயர்ந்தது. இனிப்புகள், சாலட்களில் சேர்க்கப்படும் இந்த ரஸ்தாலி பழம் உடல் வறட்சியை போக்கவும், மஞ்சள் காமாலையைத் தடுக்கவும் உதவுகிறது.

பச்சை வாழைப்பழம்

மலை வாழைப்பழம் எனப்படும் பச்சை வாழைப்பழம், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது. இது ரத்த விருத்திக்கு உதவுகிறது.

நேந்திரம்பழம்

நேந்திரம் பழம் பச்சையாக, அவித்து அல்லது சிப்ஸ் வடிவிலோ சாப்பிடக் கூடியது. புரதம் அதிகம் கொண்ட இந்த பழம் குடற்புழுக்களை நீக்க உதவுகிறது.

கற்பூரவள்ளி பழம்

இந்த வாழைப்பழம் மிகவும் இனிப்பானது. ஆனால் இந்த பழத்தை நீண்ட நாட்களுக்கு வைத்து சாப்பிடுவது மிகவும் கடினம்.

செவ்வாழைப்பழம்

இந்த வாழைப்பழம் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடலில் பலத்தை அதிகரித்து, செல்களின் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது.

எலைச்சி

அலைச்சி வகை வாழைப்பழமானது, சிறியதாக இருந்தாலும், அவை மிகச் சுவையானது. இப்பழம் மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்க உதவுகிறது.

பேயன் பழம்

பேயன் வாழைப்பழமானது வயிறு மற்றும் குடல் புண்கள் போன்ற பிரச்சனைகளை குணமாக்குவதுடன், உடல்சூட்டை தணிக்க உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *