• Sat. Oct 11th, 2025

‘ஸ்புட்னிக்’ தடுப்பூசி கண்டுபிடித்த விஞ்ஞானி கொலை

Byadmin

Mar 5, 2023


ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான ‘ஸ்புட்னிக்-வி’யை தயாரித்த 18 விஞ்ஞானிகளில் முக்கியமானவரான ஆண்ட்ரே போடிகாவ் (47) கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாா்.

தனது வீட்டில் பெல்டால் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், இந்தச் சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து விசாரிப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

வாய்த் தகராறில் இந்தக் கொலையை செய்ததாக 29 வயது இளைஞா் கைது செய்யப்பட்டுள்ளாா். அவா் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் உள்ளதாகவும் பொலிஸாா் தெரிவித்தனா்.

ஸ்புட்னிக் வி-யை தயாரிக்க உதவியதற்காக போடிகாவை அந்நாட்டு ஜனாதிபதி விளாதிமீா் புதின் கெளரவித்திருந்தாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *