• Sun. Oct 12th, 2025

அமைச்சர் காஞ்சன விசேட அறிவிப்பு!

Byadmin

Mar 12, 2023


இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை அடுத்த வாரம் முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை மேற்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு ஒப்பந்தங்களில் இருந்து விலகி, நிதிக் கட்டுப்பாடு தொடர்பாக தேவையான புதிய கொள்கை முடிவுகளை எடுப்பதே அவன் முதல் கட்டம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கான பாதை வரைபடம் மற்றும் காலக்கெடு குறித்தும் அமைச்சரவைக்கு விளக்கமளிக்கப்படவுள்ளதுடன், இறுதி வரைவு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் மற்றும் ஜய்கா நிறுவனம் ஆகியவை இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளன.

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் அந்த நிறுவனங்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாகவும், இதன்போது வழங்கக்கூடிய ஆதரவு தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, நிதிக் கணக்காய்வு, மனிதவளக் கணக்காய்வு, சொத்துக் கணக்காய்வு மற்றும் சட்டமியற்றுதல் ஆகியவற்றுக்கு உரிய நிறுவனங்களின் ஆதரவைப் பெறுவதற்கு ஏற்கனவே இணங்கியுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *