• Sun. Oct 12th, 2025

மின்சார ரயில் பாதை அமைக்க உள்ளோம்.

Byadmin

Apr 17, 2023

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றலாப் பயணிகளை ஈர்ப்பதற்காகவும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்குடனும் நானுஒயா முதல் நுவரெலியா ஊடாக உடபுஸல்லாவ வரை மின்சார ரயில் பாதையை அமைக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நுவரெலியா உள்ளிட்ட மத்திய சுற்றுலாப் பிரதேசத்திலுள்ள இடங்களுக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் மின்சார ரயில் பாதை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.

அண்மையில் நுவரெலியா பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இத்திட்டமானது இயக்க மற்றும் பரிமாற்றம் (BOT) முறையின் கீழ் நிர்மாணிக்கப்படும் எனறும், அதற்கு பொருத்தமான முதலீட்டாளர் இணைத்துக் கொள்ளப்படுவர் என்றும் தெரிவித்தார்.

உலகின் ஆறாவது உயரமான புகையிரத நிலையமான கந்தபொல புகையிரத நிலையம் உட்பட பல புகையிரத நிலையங்களை உள்ளடக்கியதாக இந்த புகையிரத பாதை அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இதனூடாக சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கு பாரிய வசதிகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய, பல புதிய ரயில் நிலையங்களை உள்ளடக்கி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *