நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலை அவதானத்திற்குரிய மட்டத்திற்கு உயரக்கூடும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, வெப்பமான காலநிலையில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரச ஆயுர்வேத வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதேபோல், அதிக வெப்பநிலையால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு கவனமாகப் பின்பற்ற வேண்டிய சில நடவடிக்கைகளை சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.
1. நீங்கள் தாகம் எடுக்கும் வரை இருக்காமல் முடிந்த அளவு தண்ணீர் ( வயது வந்தவர்கள் நாளொன்றுக்கு குறைந்தது 2.5 லீற்றர்) குடிக்கவும்.
2. தாகத்திற்கு, தண்ணீருக்கு பதிலாக இனிப்பு பானங்கள் அருந்துவதை தவிர்க்கவும்.
3. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சூரிய ஒளியில் இருக்கும் நேரத்தை குறைக்கவும்.
4. முடிந்தவரை பருத்தி ஆடைகளை அணியவும்.
5. வெளியில் சுற்றித் திரியும் போது இயன்றளவில் குடைகள் மற்றும் தொப்பிகளைப் பயன்படுத்துதல்.
6. வயதானவர்கள் அல்லது நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் இந்த நிலையில் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளது. எனவே அவர்கள் தொடர்பில் விசேட கவனம் தேவை.