• Sun. Oct 12th, 2025

இலங்கை கோள்மண்டலத்தில் மாற்றம்

Byadmin

Aug 11, 2017

கொழும்பு – 7 இல் அமைந்துள்ள இலங்கை கோள் மண்டலத்தை புனரமைப்பு செய்து நவீனமயப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1965ஆம் ஆண்டிற்கு முன்னர் காணப்பட்ட தொழில்நுட்பத்தினை மையமாக வைத்து நிர்மாணிக்கப்பட்ட இலங்கை கோள்மண்டலமானது இதுவரை எவ்வித நவீனமயப்படுத்தல்களுக்கும் உட்படுத்தப்படவில்லை.

அதனடிப்படையில் புனரமைப்பு நடவடிக்கைகளை துரித கதியில் செயற்படுத்தும் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை கோள்மண்டலம்..

கோள்மண்டலம் என்பது அடிப்படை வானியல் ஆராய்ச்சி, விண்வெளி ஆய்வு மற்றும் இரவு நேர வானம் பற்றிய கல்வி மற்றும் பொழுதுபோக்கு காட்சிகளைக் காட்டுவதற்கு அல்லது விண்வெளி ஆய்வுகள் பற்றிய பயிற்சிகள் என்பவற்றிற்காக அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர் அரங்கமாகும்.

அரச எந்திரவியல் கூட்டுத்தாபனத்தினால் 1965ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு, இலங்கை தொழில்நுட்பவியல் கண்காட்சிக்காக நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவும், விசேடமாக இரவு வானம் உருவாகும் அமைப்பினை காட்சிப்படுத்தவும் 1965ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி உத்தயோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

இதன் கட்டடக்கலைஞர் பேராசிரியர் எ.என்.எஸ். குலசிங்ஹ ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *