• Sun. Oct 12th, 2025

லிற்றோ எரிவாயு மேலும் விலை குறைக்கப்பட்டது (விபரம் இணைப்பு)

Byadmin

Jun 4, 2023

12.5 கிலோ கிராம் லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை இன்று (04) நள்ளிரவு முதல் ரூ. 452 ஆல் விலை குறைக்கப்படும் என லிற்றோ லங்கா நிறுவன தலைவர் முடித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப 12.5 கிலோ கிராம் லிற்றோ சமையல் எரிவாயுவின் புதிய விலை ரூ. 3, 186 ஆகும்.

5 கிலோ கிராம் சிலிண்டரின் ரூ. 181 ஆல் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை ரூ. 1, 281 ஆகும்.

2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை ரூ. 83 குறைக்கப்பட்டு ரூ. 598 இற்கு விற்கப்படும்.

மேற்குறிப்பிட்ட அனைத்து விலை குறைப்புகளும் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எக அவர் தெரிவித்தார்.

நிதியமைச்சு, நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA), ஜனாதிபதி செயலகம் மற்றும் LITRO லங்கா லிமிட்டெட் ஆகியவற்றின் கூட்டு முயற்சிகளை அடுத்து, இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *