• Sun. Oct 12th, 2025

பொலிஸ் காவலில் ஒருவா் உயிாிழப்பு – பல அதிகாாிகள் கைது

Byadmin

Jun 9, 2023


பொலிஸ் காவலில் வைத்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 7 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைய, சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் 7 அதிகாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவா்களில் உதவி பொலிஸ் பாிசோதகா் ஒருவரும், பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரும், பொலிஸ் கான்ஸ்டபிள்கள் 5 பேரும் அடங்கியுள்ளனா்.

நாரஹேன்பிட்டி தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றிய ஹிக்கடுவையைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட பின்னர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *