இந்தியாவின் இராமநாத மாவட்டம் கீழக்கரை மன்னார் வளைகுடாவில் மனதை மயக்கும் 7 தீவுகள் உள்ளன. அவற்றில் கடந்த 2004க்கு பின்னர் கடலில் மூழ்கிய பூவரசன்பட்டி தீவினை தவிர்த்து எஞ்சியுள்ள 6 தீவுகளிலும், பவளப்பாறைகள் பாதுகாப்பு அரணாக கரைப்பகுதியில் கோட்டையை போல் விளங்குகிறது.
பேரலைகள் அடிக்கடி தீவின் கரைப்பகுதிகளை ஆக்ரோஷமாக தழுவினாலும், பவளப்பாறைகளின் மேலடுக்கு தடுப்புகளினால் பாதிப்பிற்கு வழியில்லை.
துாத்துக்குடி பகுதிக்குட்பட்ட சாயல்குடி பகுதியில் 7 தீவுகளும், மண்டபம் பகுதியில் ஏழு தீவுகளும், கீழக்கரைபகுதியில் ஆனைபார் தீவு, வாலி முனை தீவு, அப்பாத்தீவு, வாளைத்தீவு, முள்ளித்தீவுகளில் 75 எக்டேர் அதிக பரளப்பளவு கொண்ட தலையாரித்தீவு இயற்கை அழகு கொஞ்சும் இடமாக விளங்குகிறது.
இந்த இடத்தில் பூவரசு, வேம்பு, குட்டை சிறிய பனைமரங்கள், அரியவகை கல்வடோர பெர்சிகா இனரக மரங்கள் உள்ளது. தீவின் அருகில் காலை, மாலை நேரங்களில் கூட்டமாக சத்தம் எழுப்பியபடி டொல்பின்கள் விளையாடுகின்றன.
அதேபோன்று கடல்புறாக்கள், கொக்குகள் ஓய்வெடுத்து செல்கிறது. நிலப்பரப்பு கடற்கரையில் காணக்கிடைக்காத அரியவகை தாவர இனங்கள், பூச்சிகள், பாம்புகள் உள்ளதால், அவற்றை ஆராய்ச்சி செய்யும், துறைசார்ந்த படிப்புகளை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் முதன்மை வன உயிரின காப்பாளரிடம் இருந்து அனுமதிக் கடிதம் பெற்று தீவுக்குள் சென்று ஆராய்ச்சி மேற்கொள்ளலாம்.
அப்பாதீவு, வாலிமுனை தீவு, தலையாரித் தீவுகளில் உள்ள தங்கும் கட்டடத்தில் இருந்து கொண்டு 24 மணிநேரமும், சுழற்சி முறையில் வேட்டைத்தடுப்புக் காவலர்களால் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ரோந்து பணிகள் நிமித்தமாக மன்னார் வளைகுடா வனத்துறை அலுவலர்கள் வந்து செல்கின்றனர்.
மீனவர்கள் 500 மீ., தொலைவில் தீவுப் பகுதிகளில் கடந்து செல்லலாம். ஆனால் தீவிற்குள் செல்வதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது. தீவில் ஆழம் குறைந்த பகுதியில் படகின் மூலம் பவளப்பாறைகளுக்கு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது, அதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது கருத்து வெளியிடப்பட்டள்ளது.
குறித்த இந்த ஏழு தீவுகளும் இந்தியாவிற்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.