• Sun. Oct 12th, 2025

விவசாயிகளிடத்தில் டொலர் வருகை – மாம்பழம், பப்பாளி, கருவா ஏற்றுமதிக்கும் முயற்சி

Byadmin

Jun 22, 2023

யாழ் மாவட்டத்தில் பயிரிடப்படும் புளிப்பு வாழைப்பழங்களை வாரம் ஒருமுறை துபாய்க்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

இதன் மூலம் யாழ்ப்பாண விவசாயிகள்  டொலர்களை சம்பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வடமாகாண அதிகாரிகளுடனான விவசாயத் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின்போதே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை எதிர்வரும் மூன்று வருடங்களில் வருமானத்தை ஐந்து இலட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக வடமாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன குறிப்பிடுகின்றார்.

வடமாகாணத்தில் 8000 ஏக்கர் காணிகளை இனங்கண்டு இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மாகாண ஆளுநரிடமிருந்து பணிப்புரைகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மாம்பழம், பப்பாளி, பாசிப்பழம் போன்றவற்றை வெளிநாட்டு சந்தைகளுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாணத்தின் மிளகாய்த் தேவையை பூர்த்தி செய்ய 1000 ஏக்கரில் மிளகாய் பயிரிடப்பட்டு வருவதாகவும் தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *