• Sun. Oct 12th, 2025

பலஸ்தீனர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் கூறிய தகவல்

Byadmin

Jul 20, 2023

ஒன்று இணைந்து வாழ வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொள்ள அனைவரும் பேச்சுவார்த்தை மேசைக்கு வருவதை உறுதி செய்யவும். எனவே, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற வகையில் மத்திய கிழக்கில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் பேணப்பட வேண்டும் என்பதே  எங்களின் நிலைப்பாடாகும்.  
 
எந்த விலை கொடுத்தாவது பெற்றுக் கொள்ளும் அமைதி மற்றும் பாலஸ்தீன மக்களின் படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்படுவதை உறுதிசெய்து, இஸ்ரேலும் பாலஸ்தீனும் ஒன்றுக்கொன்று இணக்கமாகச் செயல்படுவதை உறுதிசெய்யும் அமைதி எமக்குத் தேவை.நாங்கள் அமைதியை விரும்புகிறோம் என்பதுடன் பாலஸ்தீனியர்களுக்கு அவர்களின் உரிமைகளை வழங்கவும் வேண்டும். அவர்களின் தேசியம்,அரச நிருவாகம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.இது சர்வதேச அளவில் முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையாகும். இருப்பினும், பாலஸ்தீனத்தில் நடக்கும் கொலைகாரச் செயல்களைத் தடுத்து நிறுத்தி, விரைவாக இந்த சமாதான உடன்படிக்கைகளை  செயல்படுத்த அந்த சக்தி வாய்ந்த சர்வதேச பங்குதாரர்களுக்கு திறமையும், உறுதியும், அரசியல் ஆர்வமும் உள்ளதா என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
 
எனவே,இலங்கை உங்களுடன் இருக்கின்றது என்பதை பலஸ்தீன மக்களுக்கு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறேன். தேசியத்துவம் மற்றும் அரச நிர்வாகத்திற்கான உங்களின் அபிலாஷைகளுக்கும், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே அமைதியான சூழலை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்கும் நாங்கள் எங்கள் ஆதரவைத் தெரிவிக்கிறோம். சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு இது ஒரு கட்டாயத் தேவை என்பது எங்கள் நம்பிக்கையாகும்.
 
நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *