பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நான்கு தசாப்த கால அரசியல் பயணத்தில் உன்னதமான சந்தர்ப்பங்களை உள்ளடக்கிய ‘நாளைய தினத்தை நோக்கிய ரணில்’ எனும் கண்காட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் 17ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த கண்காட்சி எதிர்வரும் 18ம் திகதி முதல் 20ம் திகதிவரை பொதுமக்களுக்காக காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும் .
1977ஆம் ஆண்டில் இளம் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கை அரசியல் வரலாற்றில் முக்கிய விடயங்களில் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
நான்கு தசாப்தகாலமாக சவால் மிக்க அரசியல் பயணத்தை மேற்கொண்டு தேசிய நலனுக்காக ஆற்றிய சேவையை பாராட்டும் வகையில் இந்த கண்காட்சி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.