புதிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துச் செய்தியை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு எனது வாழ்த்துக்கள் என ஜனாதிபதி பதிவிட்டுள்ளார்.
புதிய வெளிவிவகார அமைச்சராக அபிவிருத்தி செயற்றிட்ட அமைச்சர் திலக் மாரப்பன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
வெளிவிவகார அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில் அவருக்கு பதிலாக திலக் மாரப்பன புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.