• Sun. Oct 12th, 2025

கேரளாவில் புளூ வேல்ஸ் கேம்ஸின் முதலாவது உயிர்ப்பலி!

Byadmin

Aug 16, 2017

உலகில் பல உயிர்களைக் காவுகொண்ட “புளு வேல்(Blue Whale)” எனும் மிகக் கொடிய ஒன்லைன் கேமிற்கு, கடந்த மாதம் தனது முதலாவது உயிர்பலியைக் கொடுத்துள்ளது இந்தியாவில் உள்ள கேரளா மாநிலம்.

கேரளாவின் திருவானந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயதான மனோஜ் எனும் மாணவர் அபாயகரமான இந்த கேமை பூர்த்தி செய்த பின்னர் கடந்த ஜூலை 26ம் திகதி தற்கொலை செய்துள்ளார்.

இந்த அதிர்ச்சியான செய்தியை மரணமடைந்த இளைஞரின் தாய் அநு வெளியிட்டுள்ளார். மேற்படி இளைஞர், தனது மொபைலில் இருந்த அனைத்து கேம்களையும் அழித்த பின்னர்தான் தற்கொலை செய்துள்ளார்.

இளைஞரது தாயாரின் கூற்றின்படி ஒரு முறை தனக்கு நீந்த தெரியாத போதும் ஆற்றில் குதித்துள்ளார்.  இந்த கேமைப்பற்றி ஒரு முறை மனோஜ் தனது தாயாரிடம் எடுத்துக் கூறியுள்ளார். அப்போது தாயார் ஏதோ விளையாட்டாகக் கூறுகின்றார் போலும் எனக் கருதியுள்ளார். இந்த கேமை விளையாட வேண்டாம் என வற்புறுத்தியும், தனது மகன் விளையாடுவதை நிறுத்தவில்லை என தாயார் மேலும் தெரிவித்துள்ளார்.

தான் விரைவில் இறந்தால் கவலைப்பட வேண்டாம் என மனோஜ் தனது தாயாரை வேண்டிக்கொண்டுள்ளார்.

மனோஜ் இரவில் கல்லறைகளுக்கு சென்றதாகவும், தனிமையில் கடற்கரைக்கு சென்றதாகவும் மேலும் தாயார் தெரிவுத்துள்ளார். கேம் விற்பனை நிறுவணத்தின் ஊக்குவிப்பாளர்களால் இரவின் பிந்திய பகுதியில் கேம் விளையாடுபவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் திகில் வீடியோக்களைப் பார்ப்பதும், விளையாடுபவர்களுக்காக கொடுக்கப்படும் ஒரு பணியாகும். தாய் அநுவின் கூற்றின்படி மனோஜ் இந்த கேமை ஒன்பது மாதங்களுக்கு முன் டவுன்லோட் செய்ததாகவும், பாடசாலையில் வட்டங்கள் வரைவதற்குப் பாவிக்கப்படும் கொம்பாசினால் கையைக் கிழித்துக் கொண்டதாகவும் தெரிவுத்துள்ளார். இவ்வாறான செயல்கள் எல்லாம் மேற்படி கேமை மனோஜ் விளையாடியுள்ளார் என்பதை எடுத்துக் காட்டுவதோடு, கேமில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு டாஸ்க் அவரின் உயிரையும் பறித்து விட்டது.

தனது மரணத்தின் பின் உடல் உறுப்புக்களை தானம் செய்வதற்கும் முன்வந்துள்ளார். மனோஜின் உறவினர்கள் கேம் விளையாடுவதற்கு பயன்படுத்திய மொபைல் போனை இனைய குற்றத் தடுப்பு பிரிவினருக்கு மேலதிக புலனாய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். கேரள மாநிலத்தின் முதலமைச்சர் பினாராய் விஜயன் அண்மையில் மேற்படி கேமை தடைசெய்யுமாறு கேட்டிருந்தார்.

பதினொராம் ஆண்டில் கல்வி கற்றுக் கொண்டிருந்தபோது கடந்த ஜூலை 26ம் திகதி தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

தனது மரணத்திற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பு மேற்படி கேமை மனோஜ் தரவிரக்கம் செய்ததாக பொலிசில் புகார் கொடுத்த மனோஜின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். கேம் விளையாடுவதை தடுத்து நிறுத்த மனோஜின் பெற்றோர் முயற்சித்தும், அதில் அவர்கள் தோல்வியையே சந்தித்தனர். தற்கொலைக்கு முன்பு மனோஜ் மொபைலில் இருந்த கேமை அழித்துள்ளார். தற்போது இனைய குற்றப் புலனாய்வுப் பொலீசார் மொபைல் போனை ஆராய்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *