எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான கருத்தரங்குகள் மற்றும் வகுப்புக்களை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் தரம் ஐந்துக்கான கருத்தரங்குகள், முன்னோடிப் பரீட்சைகள், மாதிரி வினாத்தாள்களை வழங்குதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
எந்தவொரு நபர் அல்லது நிறுவனமொன்று இந்த உத்தரவினை மீறிச் செயற்பட்டால் அது குறித்து அறிவிக்குமாறு பரீட்சைத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.