டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பாராளுமன்ற குழு கூட்டத்தில் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை கடும் விமர்சனம் செய்தார். குறிப்பாக அவர்கள் கூட்டணிக்கு வைத்திருக்கும் பெயர் குறித்து கடுமையாக தாக்கினார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக ராகுல் காந்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் ”மிஸ்டர் மோடி, நீங்கள் எப்படி விரும்புகிறீர்களோ, அப்படி எங்களை அழைக்கலாம். நாங்கள் INDIA. மணிப்பூர் நிலைமை சீரடைய உதவுவோம். பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரை துடைப்போம். அவர்களுடைய அனைத்து மக்களுக்கும் அன்பு மற்றும் அமைதியை மீண்டும் கொண்டு வருவோம். இந்தியாவின் யோசனையை மணிப்பூரில் மறுகட்டமைப்பு செய்வோம்” என்றார்.